[X] Close

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

குற்றம்

Chengalpattu-Sexual-harassment-of-a-girl-Youth-arrested-in-Pokso

திருப்போரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் பெரிய மேலமையூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர், திருப்போரூர் அருகே வெங்களேரி கிராமத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல சீமந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை வந்துள்ளார். நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோது அவரது 15 வயது மகள் அந்த கிராம சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார்.

image


Advertisement

பின்னர் நிகழ்ச்சி முடிந்து சிறுமியை காணாமல் தேடியுள்ளனர். அப்போது அருகில் உள்ள பால்வாடியில் உள்ள கழிவறையில் இருந்து கதவை தட்டும் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது சிறுமிக்கு அதே கிராமத்தை சேர்ந்த அருண்பாண்டியன் (21) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததும், சிறுமி சத்தமிடவே சிறுமியின் வாயில் துணியை வைத்து விட்டு கழிவறை கதவை மூடிவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது.

இதைடுத்து உடனடியாக சிறுமியின் பெற்றோர் திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அருண்பாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து செங்கல்பட்டு நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close