[X] Close

புதுச்சேரி: 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகளுக்கு அனுமதி

இந்தியா

Puducherry-Permission-to-open-theaters-till-9-pm-with-50--seats

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - மேலும் நாளை முதல் திரையங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது, இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடுதலாக

# கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இரவு 9 மணி வரை 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

# அதேபோல் மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் 50% பேருடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

# 100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

# கொரோனா தடுப்பு விதிகளுடன் சுற்றுலா  தலங்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close