[X] Close

”மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை”: ‘சார்பட்டா’ துஷாரா விஜயன்

சினிமா

I-could-not-recover-from-the-role-of-sarpatta-parambarai-Mariamma-says-Dushara-Vijayan

’சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார் நடிகை துஷாரா விஜயன்.


Advertisement

சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் அப்படத்தை பாராட்டி வருகிறார்கள். ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர், ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் பெயர்களே மறந்துவிட்டு கபிலன், மாரியம்மாள், வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்திருப்பார் இயக்குநர் பா.ரஞ்சித்.

image


Advertisement

குறிப்பாக, மாரியம்மாளாக நடித்த துஷாரா விஜயனின் நடிப்பு கவனம் ஈர்த்து ‘எனக்கு மாரியம்மா மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாளா’ என்கிற அளவுக்கு நெட்டிசன்கள் கருத்திட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து துஷாரா விஜயன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

image

“ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு மனதிற்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் ரஞ்சித் சாருக்கு நன்றி. இதுபோன்ற ஒரு சிறந்த கதாபாத்திரத்திற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அது சார்பட்டா படத்தில் நடந்துள்ளது. ரஞ்சித் சார் ஆபீஸில் இருந்து எனக்கு போன் வந்தபோது,  முதலில் நான் யாரோ என்னை  பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்து நிராகரித்து விட்டேன். அதன்பின், அந்த எண்ணிலிருந்து 17 மிஸ்டு கால் வந்தது. உடனடியாக ரஞ்சித் சார் ஆபீஸ் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.


Advertisement

image

ஆனால், ரஞ்சித் சார் மிகவும் பணிவாக அதை ஏற்றுக் கொண்டு, கதையில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி விவரித்தார். என்னை ஒரு காட்சியை நடித்து காட்ட சொன்னார்.  அவருக்கு இந்தப் பாத்திரத்தை செய்து விடுவேனா என்ற சந்தேகம் இருந்தது.  ஆனால் போட்டோஷூட் நடத்திய பிறகு, நான் அழகாக பொருந்தியிருப்பதாக நம்பினார்.

image

இந்தப் படம் முடிந்து வெளியான பின்னரும், இன்னும்  மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. நான் இவ்வளவு வருடங்களாக  காத்திருந்த வெற்றி, சார்பட்டா படத்தில் எனக்கு அமைந்தது” என்று உற்சாகமுடன் கூறியிருக்கிறார். மேலும், இயக்குநர் வசந்த பாலன் இயக்கதில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் துஷாரா விஜயன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close