[X] Close

கோவை: அடுத்தடுத்து 7 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை - பொதுமக்கள் அதிர்ச்சி

குற்றம்

robbery-held-7-places-in-coimbatore

கோவை மதுக்கரை மார்க்கெட் ஸ்ரீராம் விலாஸ் பகுதியில், அதிகாலையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


Advertisement

கோவை மாவட்டம், மதுக்கரை மார்க்கெட் ஸ்ரீராம் விலாஸ் பகுதியில் வசித்து வரும் லாட்ஜ் உரிமையாளர் ரவிக்குமார், ஓய்வு பெற்ற எல்.ஐ.சி மேலாளர் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் வெங்கட் உள்ளிட்ட 7 பேரின் வீடுகளில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பணம் நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த மதுக்கரை போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், அதில் பதிவாகியுள்ள மூன்று பேரை அடையாளம் காண நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close