[X] Close

'இந்தியாவில் வேறு மாநிலங்கள் செய்யாத செயல்': மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனி பத்திரிகை பாராட்டு

தமிழ்நாடு

German-media-has-praised-the-mk-stalin-for-setting-up-an-expert-committee-to-advise-on-economic-matters
தமிழகத்தில் முதலமைச்சருக்கு பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை கூற நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதை ஜெர்மனியை சேர்ந்த தி ஃப்ராங்க்பர்ட்டர் அல்கெமின் ஜெய்துங் என்ற பத்திரிகை பாராட்டியுள்ளது.
 
தமிழக முதல்வருக்கு ஆலோசனை கூற ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், முன்னாள் நிதித்துறை செயலாளர் நாராயணன், பேராசிரியர் ஜீன் ட்ரஸ் ஆகியோர் கொண்ட குழு அண்மையில் அமைக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இதைப் பாராட்டி எழுதப்பட்ட கட்டுரையில், தமிழ்நாட்டில் திமுக அரசு சீர்திருத்த முயற்சிகளில் ஒரு பகுதியாக பொருளாதார நிபுணர் குழு அமைத்துள்ளதாக ஜெர்மன் நாளேடு பாராட்டியுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற குழு இல்லை என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
 
தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பொருளாதார படிப்புகள் குறித்த விவரமும் அமெரிக்காவில் அவர் ஆற்றிய பணிகளும் இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளது

Advertisement

Advertisement
[X] Close