Published : 07,Aug 2017 11:25 AM

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Private-buses-face-collision-with-accident-More-than-40-people-are-injured

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் நெய்காரப்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே இன்று காலை இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த 5-க்கும் மேற்ப்பட்டோர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் அதிகளவில் காயமடைந்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்