Published : 07,Aug 2017 10:54 AM
அஜித்தின் ‘விவேகம்’ பாடல்கள் இன்று வெளியீடு

அஜித், சிவா, அனிருத் கூட்டணியில் உருவாகும் ‘விவேகம்’ படத்தின் பாடல்கள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளன.
அஜித்தின் ‘விவேகம்’ திரைப்பட பாடல்கள் இன்று மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படவுள்ளன. ஏற்கனவே, தனித்தனியாக மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள நிலையில், அனைத்துப் பாடல்களையும் இன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வேதாளம் படத்தைத் தொடர்ந்து, விவேகம் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். ஒலியமைப்பில் பல்வேறு புதுமைகளோடு இந்தப் பாடல்கள் உருவாகியுள்ளன. விவேகம் வரும் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
அஜித் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.