[X] Close

விரைவுச் செய்திகள்: காலிறுதியில் தீபிகா | போலி சிகரெட் பறிமுதல்| டி20 தொடரை வென்றது இலங்கை

கொரோனா வைரஸ்

Quick-News-Gallery-till-8AM

புதுக்கோட்டை அகழாய்வு: புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் இன்று அகழாய்வுப் பணி தொடங்க உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட மேலாய்வில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழ்வாய்வுக் குழுவினர் தெரிவித்தனர். மேலாய்வில் கிண்ணங்கள், கொள்கலன்கள் கிடைத்ததால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 


Advertisement

image

வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி: டோக்யோ ஒலிம்பிக் தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்யாவின் பெரோவாவை 6-5 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இருவரும் தலா 5 செட்களை கைப்பற்றினர். அதனால் வெற்றியை தீர்மானிக்க ஷூட் ஆஃப் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் ரஷ்ய வீராங்கனை 7 புள்ளிகள் மட்டுமே நிலையில் , தீபிகா குமாரி 10 புள்ளிகள் பெற்றார். இதையடுத்து 6 - 5 என்ற செட் கணக்கில் தீபிகா குமாரி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

'தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஊக்கத் தொகை' - ஜோ பைடன்: அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படுமென அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் நோய் பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின், ஒரே நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை என்பதால், அமெரிக்க அரசு கவலை அடைந்துள்ளது. நிலைமையை கட்டுப்படுத்தவும் கொரோனா பரவலை தடுக்கவும் அதிபர் ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்


Advertisement

image

புகையிலை விநியோகத்தை தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பு. புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து வாட்ஸ் அப் மூலம் தகவல் அளிக்கலாம் என அறிவிப்பு. குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்

மதுரையில் 3 டன் அளவிலான போலி சிகரெட் பறிமுதல்: தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் மதுரை மாநகரில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பன்னீர்செல்வம் என்பவருக்குச் சொந்தமான 2 குடோன்களில் சோதனையிட்டபோது, 1,200 அட்டைப் பெட்டிகளில் போலியாக சிகரெட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் சாக்லேட் பண்டல்களுடன் அவற்றை கலந்து தென் மாவட்டங்களுக்கு விநியோகம் செய்ததும் விசாரணையில் அம்பலம். தலைமறைவான குடோன் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement

image

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பல்வேறு நாடுகளில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல். அமெரிக்கா, பிரான்ஸ், மெக்சிகோ, தாய்லாந்தில் அதிகரித்துள்ளது நோய் தொற்று. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிரான்சிலும் ஏப்ரல் மாதத்திற்கு பின் ஒரே நாளில் சுமார் 28 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே போல், மெக்சிகோ, தாய்லாந்து, பிரேசில், பிரிட்டன், இந்தோனேஷியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

டி-20 தொடரை வென்றது இலங்கை: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இலங்கை. 3 ஆவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Sri Lanka secure T20 series win over India with seven-wicket victory in  Colombo decider | Cricket News | Sky Sports

அருங்காட்சியகம் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்க கடிதம்: கீழடி மற்றும் சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க, வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். நாளந்தா, சாரநாத், லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய அகழாய்வுகளை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்துள்ளதாகவும், அதேபோல் கீழடி மற்றும் சிவகளை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருடும் இளைஞர்: மதுரையில் கரிமேடு பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி ஓட்டிவிட்டு மீண்டும் அதே இடத்தில் கொண்டுவிடும் செல்லூரைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் பொழுதுபோக்குக்காக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி ஒட்டிவிட்டு, திருடிய இடத்திலேயே கொண்டு விட்டுவிடுவதாக கூறியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close