Published : 30,Jul 2021 08:06 AM
ஒலிம்பிக் 25 மீட்டர் பிஸ்டல்: இறுதி வாய்ப்பை நழுவவிட்ட இந்திய வீராங்கனைகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டியில் நுழையும் வாய்ப்பை இந்திய வீராங்கனைகள் நழுவவிட்டனர்.
ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கான "ரேபிட் பையர்" போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனு பாக்கர், ரஹி சர்னோபாத் கலந்துக்கொண்டனர். இதில் மனு பாக்கர் 582 புள்ளிகள் பெற்று 9 ஆவது இடத்தையும், ரஹி சரோபாத் 32ஆவது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டியில் நுழைவதற்கான வாய்ப்பை தவறவிட்டனர். இதனால் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பதக்க கனவு பறிபோனது.