[X] Close

”கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் ஊழியர்களின் சம்பளம் கட்” - பாகிஸ்தான் ரயில்வே

உலகம்

Salary-cut-for-employees-who-refuse-to-take-COVID19-vaccine-Pakistan-Railway-Ministry-s-Notification

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் ஊழியர்கள் சம்பளம் நிறுத்தப்படும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது பாகிஸ்தான் நாட்டு ரயில்வே அமைச்சகம். 


Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் ரயில்வே அனைத்து ரயில்வே பிரிவு தலைமையகத்திற்கும் தெரிவித்துள்ளது. 

ஊழியர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியரின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

பாகிஸ்தானில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  


Advertisement

Advertisement
[X] Close