Published : 29,Jul 2021 01:55 PM

"ஊழலுக்கு மட்டுமே துணை போகிறவர்கள் மோடி, அமித் ஷா" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

PM-Modi-and-Amit-Shah-are-supporting-corruptions-says-K-S-Alagiri

வருகிற 31-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வுபெறவிருந்த ராகேஷ் அஸ்தானாவை, டெல்லி காவல்துறை ஆணையராக நியமித்ததன் மூலம் தாங்கள் ஊழலுக்கு மட்டுமே துணை போகிறவர்கள் என்பதை பிரதமரும் உள்துறை அமைச்சரும் வெளிப்படுத்தி உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது, அப்போதைய இயக்குனராக இருந்த அலோக் வர்மா நடவடிக்கை எடுக்காமல் தடுக்க பல வழிகளை கையாண்டதை நாடு அறியும் என்று கூறியுள்ளார்.

பின்னர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் பேரில் அலோக் வர்மாவையும், ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய நாடகம் அரங்கேறியது என்றும் அழகிரி விமர்சித்துள்ளார்.

image

ரஃபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்ததால்தான் அலோக் வர்மா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியதை அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்திற்காக ராகேஷ் அஸ்தானாவுக்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆதரவாகவே இருந்து வந்துள்ளனர் என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை அரவணைப்பதன் மூலம் பதவியில் தொடரும் தார்மீக உரிமையை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இழந்துவிட்டனர் என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்