Published : 29,Jul 2021 01:49 PM
``புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடம் அமைக்க உறுதி" - பிரதமர் மோடி ட்வீட்

புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடம் அமைத்து தர உறுதி பூண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கானுயிர் ஆர்வலர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்தியாவில் 18 மாநிலங்களில் 51 புலிகள் சரணாலயங்கள் உள்ளன என்றும், உலகளவில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட புலிகள் இந்தியாவில் வசிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ள மோடி, புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை அமைத்து தர உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
புலிகள் பாதுகாப்பு உத்தியில் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவது மிக முக்கியமானது என்றும் பதிவிட்டுள்ளார்.