[X] Close

ஆபாச படங்களை அனுப்பச்சொல்லி இன்ஸ்டாகிராமில் மாணவிக்கு மிரட்டல்: இளைஞர் கைது

குற்றம்

Send-pornographic-images-Youth-arrested-for-threatening-student-on-Instagram

ஆவடி அருகே ஆபாச படங்களை அனுப்பக்கோரி, இன்ஸ்டாகிராமில் மாணவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

ஆவடியை அடுத்தள்ள அயப்பாக்கம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர், அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையில், மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அசாருதீன், கண்ணன் ஆகியோரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாணவி அவர்களுடன் அடிக்கடி தகவல்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் இருவரும் மாணவியிடம் ஆபாச படம் எடுத்து அனுப்பும்படி மிரட்டி உள்ளனர். இதனால், பயந்துபோன மாணவி தனது ஆபாச படத்தை எடுத்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அவர்கள் மீண்டும் இதேபோல் பல படங்களை அனுப்பி வைக்கும் படி மாணவியிடம் கூறியதாக கூறப்படுகிறது.


Advertisement

image

இதற்கு மாணவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரும் இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவதாக மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து இளைஞர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மேல சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (21) என்ற கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் அசாருதீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close