Published : 07,Aug 2017 07:26 AM

ஆப்கானில் கொடூர தாக்குதல் - குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலி

deadly-attack-in-Afghanistan---more-than-50-people--including-children

ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் சர்-இ-புல் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் திடீரென மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தினர். 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைக்கப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் உடல்கருகி பலியானார்கள். கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஆப்கானின் 7 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டதாக அம்மாகாண ஆளுநர் ஜபியுல்லா அமானி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை தலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பினர் குழுவாக இணைந்து செயல்பட்டுள்ளதாக அமானி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலால் அங்கும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்