[X] Close

மதுரை: எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சந்திக்கத் தயார் - செல்லூர் ராஜூ

தமிழ்நாடு

Madurai-AIADMK-is-ready-to-face-the-charges-against-us-Sellur-Raju

அதிமுக எப்போதும் உயிரோட்டமாக, எழுச்சியாக உள்ளது என செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


Advertisement

மதுரை செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது.....

image


Advertisement

“அதிமுகவை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் இன்று மறைந்த ஸ்டேன் சுவாமிக்கு அஞ்சலியை செலுத்தியுள்ளோம். கொரோனா உயிர்க்கொல்லி நோய் உலக மக்களிடையே கடந்த 450 நாட்களாக அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா மூன்றாம் அலை வேறு வரும் என்று சொல்கிறார்கள் என்றவரிடம் அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறையில் நடந்த முறைகேட்டை விவாதிக்கத் தயாரா என அமைச்சர் மூர்த்தி பேசியது குறித்த கேள்விக்கு,

பட்டவர்த்தனமாக ஊழல் நடந்தால் அதிகாரிகள் மட்டத்தில் அதை விசாரித்தால் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அது அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடாது. பொதுவாழ்க்கையில் ஒழுக்கம் நேர்மை இருக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களுக்காக பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும்.

மக்கள் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். ஆனால், திமுக பழிவாங்கும் நடவடிக்கையாக செய்வதால்தான் அதிமுக அதனை எதிர்க்கிறோம். அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். அதை மக்கள் நம்ப மாட்டார்கள்.” என்றார்


Advertisement

அதிமுக போராட்டம் நகைச்சுவை என அமைச்சர் மூர்த்தி கூறியது குறித்த கேள்விக்கு, “அமைச்சர் கூறியதை நகைச்சுவையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக அதிமுக போரட்டம் நடைபெற்றது. அதிமுக போராட்டம் குறித்து வணிகவரி பதிவுத்துறை அமைச்சருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உளவுத்துறை காவல் துறையின் தகவலின் படி அதிமுக போராட்டம் பற்றி முதல்வருக்கு தெரியும்.

image

நேற்று நடந்த போராட்டன் மூலம் அதிமுக தற்போது உயிரோட்டமாக உள்ளது. அதிமுக எப்போதும் எழுச்சியோடு உள்ளது. அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும் போராட்டத்தில் தொண்டார்கள் உற்சாக கலந்து கொண்டார்கள். திமுக ஆளுங்ட்சி என்றால் அத்துமீறல் கூடும் என்பது நிதர்சனமான உண்மை. திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

மதுரையில் ரவுடிகள் ராஜ்ஜியமாக இருந்ததை அமைதி பூங்காவாக அதிமுக மாற்றியது. திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம் தானாக வந்துவிடும். திமுக ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மத்திய அரசை ஒன்றிய அரசு எனச்சொல்லி சிறுமைப்படுத்தினாலும் பிரதமர் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு நிதியை கொடுத்துள்ளார்.

நாங்கள் பிரதமரையும், அமித்ஷாவையும் சந்தித்த அந்த வெற்றியை பொறுத்துக் கொள்ளாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுகிறார்கள். எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சந்திக்க அதிமுக எப்போதும் எதற்கும் தயாராக உள்ளது” என பேசினார்.


Advertisement

Advertisement
[X] Close