Published : 28,Jul 2021 10:13 PM

குத்துச்சண்டையில் எதிரணி வீரரின் காதை கடிக்க முயன்ற மொராக்கோ வீரர்

Tokyo-Olympics-Moroccan-boxer-Youness-Baalla-tried-to-bite-New-Zealand-Boxer-David-Nyika-who-was-an-opponent-in-a-boxing-match-in-Heavyweight-Category

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹெவி வெயிட் குத்துச்சண்டை பிரிவில் மொராக்கோ நாட்டை சேர்ந்த 22 வயது வீரர் Youness Baalla, தன்னை எதிர்த்து விளையாடிய நியூசிலாந்து வீரர் David Nyika-வின் காதை கடிக்க முயன்றது பாக்சிங் ரிங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

எதிரணி வீரர் ஆட்டத்தின் முதல் இரண்டு சுற்றுகளில் லீட் செய்த காரணத்தினால் ஆவேசமடைந்த யூனஸ், டேவிடை பற்றிக் கொண்டு காதை கடிக்க முயன்றுள்ளார். இருப்பினும் அந்த முயற்சியில் தோல்வியடைந்தார். அதோடு இந்த ஆட்டத்திலும் அவர் 0 - 5 என வீழ்ச்சியடைந்தார். 

அவரது இந்த செயல் முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசனின் செயலை போல இருப்பதாக பலரும் சொல்லி வருகின்றனர். 1997-இல் நடைபெற்ற தொழில்முறை குத்துச்சண்டை போட்டி ஒன்றில் மைக் டைசன் தன்னை எதிர்த்து விளையாடிய ஹோலிபீல்டின் காதை கடித்தது குறிப்பிடத்தகக்கது. 

image

“அவர் என் காதை கடிக்க முயன்றார். இருப்பினும் எனது உடலில் வியர்வை இருந்த காரணத்தினாலும், அவர் மவூத் கார்ட் அணிந்திருந்த காரணத்தினாலும் அதை செய்ய முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் அதிலிருந்து தப்பினேன். ஒரு முறை நெஞ்சு பகுதியில் நான் கடி வாங்கியுள்ளேன். ஆனால் இது ஒலிம்பிக். இங்கே நமது ஆட்டம் ரொம்ப முக்கியம்” என்கிறார் இரண்டு முறை காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற டேவிட் ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்