[X] Close

2024-ல் புதிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

வணிகம்

Hyundai-Likely-To-Launch-New-Electric-car-In-India-By-2024

எலெக்ட்ரிக் வாகனத் துறையில் தினமும் ஓர் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், வரும் 2024-ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ரக எலெட்க்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.


Advertisement

குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்களில் ஹூண்டாய் நிறுவனம் கவனம் செலுத்த இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image


Advertisement

தற்போது ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா மாடல் ஏற்கெனவே சந்தையில் இருக்கிறது. இந்த காரின் விலை 24 லட்ச ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஆனால், புதிதாக வரவிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் காம்பேக் ரக கார்களாக இருக்கும். ஆனால், இந்த கார்களின் அளவு உள்ளிட்ட இதர விஷயங்களை முடிவு செய்யவில்லை என ஹூண்டாய் தெரிவித்திருக்கிறது.

"புதிய ரக கார்களுக்கான மார்க்கெட் ரிசர்ச் தொடங்கி இருக்கிறோம். அறிமுகம் செய்ய இருக்கும் கார் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று ஹூண்டாய் தெரிவித்திருக்கிறது.

Image


Advertisement

தற்போது டாடா குழுமத்தின் நெக்சான் இவி கார் விற்பனை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் அதே பிரிவில் இருக்கும் ஹூண்டாய் வென்யூ கார், எலெக்ட்ரிக் வாகனமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்து ஹூண்டாய் நிறுவனம் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.


Advertisement

Advertisement
[X] Close