Published : 07,Aug 2017 06:12 AM

சென்னையிலிருந்து புதுச்சேரி, சேலத்திற்கு ரூ.2,500-ல் பறக்கலாம்...

Flight-service-starts-to-chennai-to-selam--puducherry

சென்னையில் இருந்து சேலம் மற்றும் புதுச்சேரிக்கு குறைந்த செலவில் அடுத்த மாதம் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் பிராந்தியங்களை இணைக்கும் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய-மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ளும் இந்த திட்டத்தினால், ஏராளமான மக்கள் குறைவான பயணக் கட்டணத்தில் விமான சேவையை பெற முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது, 500 கி.மீ பயணத்திற்கு, 2,500 ரூபாயாக நிர்ணயிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை-புதுச்சேரி இடையேயும், அதன் பின்னர் சென்னை-சேலம் இடையேயும் விமான சேவையைத் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. பிராந்திய இணைப்புத் திட்டம் வெற்றியடைந்தால், அடுத்தாண்டு முதல் வேலுர், தஞ்சை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத மற்றும் பயன்படத் தகுதியில்லாத விமான நிலையங்களை சீரமைத்து குறைந்த செலவில் விமான சேவை வழங்குவதே பிராந்திய இணைப்புத் திட்டத்தின் நோக்கமாகும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்