[X] Close

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ‘குருதி’

சினிமா

Actor-Prithviraj---s-thriller-film-Kuruthi-release-on-ott

ஓணம் பண்டிகையையொட்டி நடிகர் பிரித்விராஜின் ‘குருதி’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.


Advertisement

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பிரித்விராஜ், இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகத்திறமைகளைக் கொண்டு விளங்குகிறார். தற்போது, மோகன்லால் நடிப்பில் ‘ப்ரோ டேடி’ படத்தையும் இயக்கி வருகிறார். ஏற்கெனவே, இரண்டுப் படங்களையும் தயாரித்திருக்கிறார்.

இந்த நிலையில், ’பிரித்விராஜ் புரொடொக்‌ஷன்’ மூலம் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன், மூன்றாவது படமாக ‘குருதி’ படத்தை தயாரித்திருக்கிறார்.


Advertisement

image

மனு வாரியர் இயக்கியுள்ள இந்த த்ரில்லர் படத்தில் பிரித்விராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த வருடம் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் ‘கோல்டு கேஸ்’ வெளியான நிலையில், தற்போது ‘குருதி’ படமும் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஓணம் பண்டிகையையொட்டி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close