
சென்னை பல்லாவரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இன்று அதிகாலை பல்லாவரத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி அரசு புறநகர் பேருந்து வந்து கொண்டிருந்தது. பல்லாவரத்தில் மேம்பாலத்திற்காக கட்டப்பட்டிருந்த பள்ளம் அருகே பேருந்து வந்த போது, திடீரென ஓட்டுநனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தின் முன்பக்கம் பலமாக சேதமாகின. இந்த விபத்தால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.