[X] Close

அசாம் - மிசோரம் வன்முறை: இரு மாநில முதல்வர்கள் பரஸ்பரம் புகார்

வீடியோ ஸ்டோரி

அசாம், மிசோரம் எல்லைப் பிரச்னை தொடர்பாக, அசாமைச் சேர்ந்த 5 காவலர்கள் உயிரிழந்த நிலையில், இரு மாநில முதலமைச்சர்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டி ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளனர்.

அசாமின் கச்சார் மற்றும் மிசோரமின் கோலாசிப் மாவட்டத்திற்கு இடையேயான எல்லைப் பிரச்னையால் நேற்றுமுன்தினம் வன்முறை ஏற்பட்டது. இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 5 காவலர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், வன்முறைக்குப் பின் மிசோரம் காவல்துறையினர் கலவரக்காரர்களுடன் கொண்டாடும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மிகவும் வருந்ததக்கத்தது எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, மிசோரத்தைச் சேர்ந்த தம்பதி மீது அசாம் மக்கள் தாக்குதல் நடத்தியதாக வீடியோ ஒன்றை, மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா பதிவிட்டுள்ளார்.


Advertisement

இதனிடையே இரு மாநிலங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இருமாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close