[X] Close

காதலித்து கர்ப்பமாக்கி பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை தாக்கிய 2 பேர் கைது

குற்றம்

2-arrested-for-attacking-a-young-man-who-refused-to-marry-a-woman-he-fell-in-love-with-and-got-pregnant

சாயல்குடி அருகே பெண்ணை காதலிப்பதாகக்கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்தவரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ய முயற்சி செய்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (31). இவர், அதே ஊரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி காதலித்து வந்த நிலையில் அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்ய மறுத்த கணேசமூர்த்தி வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த பெண்ணுக்கு இரண்டு மாத பெண் குழந்தை உள்ளது.

image


Advertisement

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து புகாரின் பேரில் கணேசமூர்த்தியை கைதுசெய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த கணேசமூர்த்தியை பெண்ணின் உறவினர்கள் கடலாடி கால்நடை மருத்துவமனை முன்பாக வைத்து இரும்புக கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதில், படுகாயம் அடைந்த கணேசமூர்த்தி சிகிச்சைக்காக கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும், கணேசமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரியகுளத்தை சேர்ந்த கார்த்திகேய சேதுபதி, சோணை, மகேஷ்குமார், ஜெகநாதன், மற்றும் மற்றொரு மகேஷ்குமார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்த கடலாடி போலீசார் இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image


Advertisement

இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அப்பெண் அளித்த புகாரின் பேரில் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணேசமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து, தலைமறைவான உள்ள மூன்றுபேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close