[X] Close

"பெகாசஸ் விவகாரம் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்": பிரதமர் மோடியிடம் மம்தா வலியுறுத்தல்

வீடியோ ஸ்டோரி

பெகாசஸ் உளவு விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பிலான விசாரணையை கோருவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

டெல்லியில் பிரதமர் மோடியை மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசிய பின் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னதாக பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது மேற்கு வங்காளத்திற்கு வர வேண்டிய மத்திய அரசின் நிலுவைத் தொகைகளை உடனடியாக விடுவிப்பதுடன் போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவும் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அரசியல் ரீதியாக பிரதமரும் மேற்கு வங்காள முதல்வரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

மம்தா தனது டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தை சந்தித்து பேசினார். அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களையும் மம்தா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து களமிறங்க மம்தா முயற்சித்து வருவதாகவும் அதற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close