[X] Close

97 ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு முதல் தங்கம் - பரிசு மழையில் நனையும் வீராங்கனை

ஒலிம்பிக்

First-gold-in-the-Olympics-for-the-Philippines-by-weightlifter-Hidilyn-Diaz-and-she-drenched-in-rain-of-prizes

பிலிப்பைன்ஸ் நாட்டுக்காக ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் ஹிடிலின் டயஸ். 30 வயது வீராங்கனையான இவர் பளு தூக்கும் விளையாட்டில் தான் நாட்டிற்காக தங்கத்தை தட்டி தூக்கியுள்ளார். 97 ஆண்டு காலமாக ஒலிம்பிக்கில் பங்கேற்றும் பிலலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த வீரர்களால் தங்கம் வெல்ல முடியவில்லை. அந்த ஏக்கத்தை தான் போக்கியுள்ளார் ஹிடிலின். 


Advertisement

55 கிலோ எடைப்பிரிவில் க்ளீன் அந்த ஜெர்க் ஈவெண்டில் 127 கிலோ பளுவை தூக்கி ஒலிம்பிக் அரங்கில் புதிய சாதனை படைத்துள்ளார். குடும்பத்தை விட்டு பிரிந்து 7 மாத காலம் மலேசியாவில் தங்கி சிறப்பு பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். அதற்கு கொரோனா தொற்று பரவலும் ஒரு காரணமாக இருந்துள்ளது. 

image


Advertisement

அவரது வெற்றிக்கு ஊக்கப்பரிசு கொடுக்கும் வகையில் அந்நாட்டு அரசும், தொழிலதிபர்கள் என அனைவரும் கொடுத்த பரிசு தொகையாக இதுவரை இந்திய ரூபாய் மதிப்பில் 5 கோடி ரூபாயை பெற்றுள்ளார். அதோடு ஒரு வீடு உட்பட சில பரிசுகளும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close