Published : 27,Jul 2021 07:28 PM

‘இல்வாழ்க்கையில் இணையலாமா?’: லைவ் பேட்டியிலேயே மண்டியிட்ட கோச்.. ஓகே சொன்ன வீராங்கனை!

After-Defeat-in-Fencing-sports-at-Tokyo-Olympics-Argentina-fencer-Maria-Belen-Perez-Maurice-accepts-her-coach-Lucas-Guillermo-Saucedo-Marriage-Proposal

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு அவரது பயிற்சியாளர் ‘இல்வாழ்க்கையில் இணையலாமா?’ என ப்ரோப்போஸ் செய்ய அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். இப்போது இருவரும் செம ஹேப்பி. 

அர்ஜென்டினா நாட்டுக்காக வாள்வீச்சு விளையாட்டில் களம் கண்டவர் மரியா பெலன் பெரெஸ் மாரிஸ். 36 வயது வீராங்கனையான இவர், ஹங்கேரி நாட்டின் அன்னாவிடம் 12 - 15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று வெளியேறினார். 

தோல்வி குறித்து காட்சி ஊடகம் ஒன்றிற்கு மாரிஸ் பெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரது பயிற்சியாளர் Lucas Guillermo Saucedo, அவருக்கு பின்னால் நின்றபடி ‘இல்வாழ்க்கையில் இணையலாமா?’ என்பதை சிறிய பேப்பரில் எழுதி சிம்பாலிக்காக கேட்க. அதை படித்ததும் ஆனந்த கூக்குரல் இட்டு ‘இனி வாழ்க்கையில் இணைந்து பயணிக்கலாம்’ என சம்மதம் சொல்லியுள்ளார். அது அந்த ஊடகத்தின் கேமராவில் பதிவாகியுள்ளது. 

வாள்வீச்சு விளையாட்டு மூலமாக தான் இருவருக்குமான அறிமுகமும், சந்திக்கின்ற வாய்ப்பும் கிட்டியுள்ளது. இருவரும் அர்ஜென்டினாவுக்காக வாள் வீசி விளையாடி உள்ளனர். அப்போது இருவரும் நட்பாக பழகியுள்ளானர். பின்னர் மாரிஸின் பயிற்சியாளராகி Saucedo. நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மலர்ந்துள்ளது. 

பயிற்சியாளர் Saucedo, மாரிஸின் காதலராக 17 ஆண்டு காலம் இருந்துள்ளார். தற்போது தான் இருவரும் மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.  

“அவள் போட்டியில் தோல்வியுற்றதும் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டாள். அவளது வாடிய முகத்தை மாறா புன்னகையுடன் இருக்க செய்யும் நோக்கில் ப்ரோப்போஸ் செய்தேன்” என்கிறார் பயிற்சியாளர் Saucedo. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்