Published : 27,Jul 2021 12:34 PM

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சில மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Extremely-heavy-rain-predicted-for-Uttarakhand-and-uttar-pradesh

வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் உத்தராகண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், பஞ்சாப், ஹரியானாவில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மகாராஷ்டிரா, தெலங்கானா, கோவாவில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் சில மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம், கேரளா, கர்நாடகாவிற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்