[X] Close

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கறிஞர் போக்சோவில் கைது

குற்றம்

Chennai-A-lawyer-has-been-arrested-in-Pokso-for-sexually-harassing-a-girl

சென்னை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கறிஞரை போக்சோவில் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


Advertisement

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பெண், தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பனிபுரிந்து வருகிறார். இவரது 10 வயது மகளுக்கு கொளத்தூரை சேர்ந்த விசு (35), என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசுவை அழைத்து விசாரணை செய்தனர்.

image


Advertisement

அப்போது திருவேற்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து விசுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்ததில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close