Published : 27,Jul 2021 07:02 AM
ஒலிம்பிக்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வியடைந்தது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், சவுரப் செளத்ரி ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பிரிவில் மொத்தம் 8 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இதில் இந்திய ஜோடி 7-ஆம் இடத்தை பிடித்து போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது.