இங்கிலாந்தில் நடைபெற்ற கோழிப்பந்தயம்

இங்கிலாந்தில் நடைபெற்ற கோழிப்பந்தயம்
இங்கிலாந்தில் நடைபெற்ற கோழிப்பந்தயம்

இங்கிலாந்தில் நடைபெற்ற வித்தியாசமான உலக சாம்பியன்ஷிப் கோழிப்பந்தயத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.  

ஜல்லிக்கட்டு போன்று கோழிப்பந்தயமும் நமது நாட்டின் கலாச்சார அடையாளம். மிருக வதை சட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஜல்லிக்கட்டு, கோழிப்பந்தயம் போன்ற விளையாட்டுகளை இந்தியாவில் அரசு தடை செய்ய விரும்பினாலும் பலநாடுகளில் இது போன்ற விளையாட்டுகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

இங்கிலாந்தில் பொன்சால் என்ற கிராமத்தில் 30-வது ஆண்டாக நடைபெற்ற இந்தப்போட்டியை நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். 9 வயது சிறுவனான ஜாக் அல்லாப் என்பவன் வளர்க்கும் COOKED IT என்ற கோழி போட்டியில் முதலிடம் பிடித்தது. கடந்தாண்டு முதலிடம் பிடித்த PLUCKED IT என்ற கோழி இரண்டாவது இடம் பிடித்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com