[X] Close

தொடர்ந்து 8 தொடர்களை வென்று சாதனை: கோலிக்கு குவியுது பாராட்டு

8-successive-Test-series-wins-for-Virat-Kohli-s-Team-India

இந்திய அணி, தொடர்ந்து 8 தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளதை அடுத்து கேப்டன் விராத் கோலிக்கு பாராட்டுகள் குவிகிறது.
 


Advertisement

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை கைப்பற்றியது.  கொழும்பில் நடைபெற்ற இந்த டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ஈட்டியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 622 ரன்களும்‌ இலங்கை அணி 183 ரன்களும் எடுத்தன. ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி மூன்றாவது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவது நாளான நேற்று இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணியின் இரண்டாவது‌ இன்னிங்ஸ், 386 ரன்களில் முடிவுக்கு வந்தது. ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் என கைப்பற்றியுள்ளது. 

இந்த வெற்றியுடன் இந்திய அணி, தொடர்ந்து 8 தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது. இது அனைத்தும் கோலி தலைமையில் கிடைத்தவை. இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தொடர்ந்து 9 தொடர்களில் வென்றதே சாதனையாக இருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close