Published : 25,Jul 2021 08:24 PM

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா

Indian-Cricket-Team-Batting-first-against-Sri-Lanka-in-the-first-T20I-match

தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய சொல்லி பணித்துள்ளது. 

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியா 2 - 1 என்ற கணக்கில் வென்றது. 

image

தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் இளம் வீரர் பிருத்வி ஷா இந்த போட்டியில் அறிமுக வீரர்களாக களம் கண்டுள்ளனர். இந்தியா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்துள்ளது. பிருத்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்