[X] Close

ஒன்றரை வயதில் பல சாதனைகள் படைத்த குழந்தை ஆரோஹி

வீடியோ ஸ்டோரி

மழலை மாறா பிஞ்சு வயதில் World book Records, Asia Book of Records என பல சாதனை புத்தகங்களில் இடம்பிடித்திருக்கிறார் குழந்தை ஆரோஹி. ஒன்றரை வயதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களும், அதன் பெயர்களும் தற்போது அந்தக் குழந்தைக்கு அத்துப்படி.

பிறந்த 16 மாதங்களில் தத்தி நடை பழகத் தொடங்கிய நேரத்தில் படம் பார்த்து பெயர் சொல்லத் தொடங்கிய குழந்தை ஆரோஹி, சில வாரங்களில் 800-க்கும் மேற்பட்ட படங்களை அடையாளம் காட்டத் தொடங்கி இருக்கிறார். தானியங்கள், உலக நாடுகளின் வரைபடங்கள், விலங்குகள் என குழந்தை சொல்ல சொல்ல பெற்றோர்களுக்கும் வியப்பு ஏற்பட்டிருக்கிறது.

குழந்தையின் அறிவுத்திறனுக்கு உதவும் என படம் பார்த்து பெயர் சொல்வதை கற்றுக் கொடுக்கத் தொடங்கிய பெற்றோர்களே, ஒருகட்டத்தில் ஆரோஹிக்கு அதில் இருக்கும் ஆர்வத்தைக் கண்டு அதனை சாதனையாக மாற்றும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள்.


Advertisement

அந்தவகையில், ஒன்றரை வயதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை அடையாளம் காட்டும் ஆரோஹியின் திறமை World book Records, Asia Book of Records, India Book of Records போன்றவற்றில் இடம்பெற்று சாதனையாக மாறியிருக்கிறது. அந்த நேரத்தில், படங்களை அடையாளம் மட்டுமே காட்டிய ஆரோஹி, தற்போது மழலை மொழியில் அவற்றின் பெயர்களை குறிப்பிடத் தொடங்கியிருக்கிறார்.

குழந்தை ஆரோஹியின் திறமை மேன்மேலும் வளர்ந்து, இன்னும் பல சாதனைகள் படைக்கட்டும்.


Advertisement

Advertisement
[X] Close