[X] Close

ஒலிம்பிக் டென்னிஸ்: முதல் சுற்றில் ஹூகோ டெலிலியனை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி

விளையாட்டு,ஒலிம்பிக்

Olympic-Tennis-Djokovic-defeats-Hugo-Delillian-in-first-round

கோல்டன் ஸ்லாம் கனவுடன் டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள முன்னணி டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அவர், பொலிவியாவின் ஹூகோ டெலிலியனை 6- 2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் தொடர்களை வென்றுள்ள ஜோகோவிச், தனது அடுத்த சுற்றில் ஜெர்மனியின் ஜேன் லெனார்டு ஸ்டரூபை எதிர்கொள்கிறார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்று, அடுத்து வரும் அமெரிக்க ஓபன் போட்டியிலும் ஜோகோவிச் வென்றால், கோல்டன் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற கவுரவத்தை பெறுவார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close