[X] Close

பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்தான் லஞ்ச ஒழிப்பு சோதனை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழ்நாடு

MR-Vijayabhaskar-says-about-raid-by-vigilance-and-anti-corruption-officials-at-his-properties-was-The-first-stage-of-retaliation

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


Advertisement

தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், அதிமுக உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் "எனது வீடு உள்ளிட்டவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம். எனக்கு கரூரிலும், சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. கைபற்றப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது. உரிய ஆவணங்களை சமர்பிப்போம். அதோடு எனது வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார். 

லஞ்ச ஒழிப்பு சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். கரூரில் அதிமுகவும் பல தொல்லைகளை கொடுத்து திமுகவுக்கு மாற்ற வைக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அமைச்சரும், கரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இதில் அரசியல் காழ்ப்புணர்வு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close