[X] Close

விரைவுச் செய்திகள்: களைகட்டும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் | ஷில்பா ஷெட்டி வீட்டில் சோதனை

தமிழ்நாடு

Tamilnadu--India--World-news-till-12-PM

வெற்றியுடன் தொடங்கிய இந்திய ஹாக்கி அணி: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. 'ஏ' பிரிவு போட்டியில் நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.


Advertisement

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது: பாரத மாதா மற்றும் இந்துமத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டுவந்த நிலையில் மதுரை அருகே கள்ளிக்குடியில் காவல்துறை கைது செய்தது.

2ஆவது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை: 2ஆவது நாளாக பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

100 அடியை நெருங்கியது பவானி அணை: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக உள்ளது. 105 அடி நீர்மட்டத்தில் 99 அடியை தாண்டியது.

கோவை, நீலகிரியில் தொடரும் கனமழை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை தொடருகிறது. இதனால் காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துவருகிறது. எனவே சோலையாறு அணை எந்நேரமும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வில்வித்தை - இந்திய இணை காலிறுதிக்கு முன்னேற்றம்: ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் தீபிகா மற்றும் பிரவீன் இணை காலிறுதிக்கு முன்னேறி இருக்கின்றனர்.


Advertisement

ஒலிம்பிக் - முதல் தங்கத்தை வென்றது சீனா: டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா. 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் சீனாவின் யாங்.

துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு ஏமாற்றம்: மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. தனிநபர் தகுதிச்சுற்றுடன் இளவேனில் மற்றும் அபுர்வி வெளியேறினர்.

லஞ்சம் - வணிக வரித்துறை அதிகாரி கைது: சென்னையில் 25ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை உதவி ஆணையர் கைது செய்யப்பட்டார். முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் செயல்பட வைக்க பணம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கினார்.

சூதாட்டப் பணம் ரூ.25 லட்சம் வழிப்பறி: வேலூர் அருகே காரை பின்தொடர்ந்து வந்து 25 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டது. சூதாட்டத்தில் சம்பாதித்த பணம் என விசாரணையில் தெரியவந்தது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஷில்பா ஷெட்டி வீட்டில் சோதனை: மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆபாசப் பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் இதுவரை 136 பேர் உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான பாதிப்புகளில் இதுவரை 136 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையால் கோவா, தெலங்கானா மாநிலங்களும் தத்தளித்து வருகிறது.

புரட்டிப்போட்ட மழை - பலி 56 ஆக அதிகரிப்பு: சீனாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56ஆக அதிகரித்திருக்கிறது. இரு தினங்களில் தாக்க உள்ள இன் ஃபா புயலை சமாளிக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

சிறுவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி - பரிந்துரை: கொரோனா தடுப்பூசியான மாடர்னா மருந்தை சிறுவர்களுக்கு செலுத்தலாம் என ஐரோப்பிய மருந்துகள் முகமை பரிந்துரைத்திருக்கிறது.

இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி: இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 3 போட்டிகள் தொடரை 2க்கு1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.


Advertisement

Advertisement
[X] Close