[X] Close

விரைவுச் செய்திகள்: 6 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு | டோக்கியோ ஒலிம்பிக் தொடக்கம்

தமிழ்நாடு

Tamilnadu--India--World-news-till-11-PM

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்கம்: கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையில் ஜப்பானில் தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா. மன்பிரீத் சிங், மேரி கோம் தலைமையில் இந்திய வீரர், வீராங்கனைகள் அணி வகுத்துச் சென்றனர்.


Advertisement

இலங்கை தமிழர் நலன் காக்க நடவடிக்கை: தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் நலன் காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து திமுக அரசு உத்தரவிட்டிருக்கிறது.


Advertisement

நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள் புறக்கணிப்பு: நாடாளுமன்றத்தில் மாநில மொழிகளையும் ஆங்கிலத்தையும் மத்திய அரசு புறக்கணிப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா குற்றச்சாட்டி இருக்கிறார். நடவடிக்கை எடுப்பதாக துணைக்குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உறுதியளித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

ஜூலை 28-இல் அதிமுக போராட்டம்: தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு மெத்தனமாக செயல்படுவதாக அதிமுக குற்றம்சாட்டியிருக்கிறது. வரும் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் என அறிவித்திருக்கிறது.

வங்கி லாக்கரை சோதனையிட திட்டம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்திருக்கிறது. வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Advertisement

6 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 830 ஆக குறைந்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் தொற்று சற்றே உயர்ந்திருக்கிறது.

நீட் தேர்வு ஒத்திவைப்பில்லை: கொரோனா சூழல் காரணமாக நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

நிரம்பி வழியும் அணைகள்: தொடர் மழையால் பில்லூர் மற்றும் அமராவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. முல்லைப்பெரியாறு, பவானி சாகர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்திருக்கிறது.

காவிரியில் வரும் 36,000 கனஅடி நீர்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்க பாலம்: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்க தொங்கு பாலம் அமைக்க முதற் கட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறது.

சுருக்குமடி வலைக்கு எதிராக போராட்டம்: சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என படகுகளில் கருப்புக்கொடி கட்டி புதுச்சேரியில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெகாசஸ் - பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்: பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் தேசத் துரோகம் இழைத்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் அமைச்சரின் அறிக்கையை கிழித்து எறிந்த திரிணமூல் எம்.பி. தொடர் முழுவதும் நீக்கப்பட்டார்.

மழை பாதிப்புகளால் 42 பேர் பலி: மகாராஷ்டிராவில் நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான பாதிப்புகளில் 42 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையால் கோவா, தெலங்கானா மாநிலங்களும் தத்தளித்து வருகிறது.

வெடிபொருட்களுடன் பறந்து வந்த ட்ரோன் தகர்ப்பு: ஜம்மு காஷ்மீரில் வெடிபொருட்களுடன் பறந்துவந்த ட்ரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தான் பகுதியிலிருந்து அனுப்பப்பட்டதா என விசாரணை நடந்துவருகிறது.


Advertisement

Advertisement
[X] Close