Published : 23,Jul 2021 06:27 PM
'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல்' - சூர்யாவின் 'ஜெய் பீம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் தயாராகும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ‘கூட்டத்தின் ஒருத்தன்’ திரைப்படத்தின் இயக்குநரான தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் இப்படத்தில் தயாரிப்பு மட்டுமன்றி, நடிக்கவும் செய்கிறார் சூர்யா. சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, இந்த போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பர் என தெரிகிறது.
'ஜெய் பீம்' போஸ்டரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக தோற்றமளிப்பதை பார்க்க முடிகிறது.
முன்னதாக, நேற்றைய தினம் சூர்யாவின் 40-வது திரைப்படம் என்ற அடைமொழியுடன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் வெளிவந்திருந்தது.
#Suriya40 is #EtharkkumThunindhavan⁰
— Sun Pictures (@sunpictures) July 22, 2021
Here is the first look:https://t.co/qNsXcGGvZF⁰@Suriya_offl@pandiraj_dir#Sathyaraj@immancomposer@RathnaveluDop@priyankaamohan@sooriofficial ⁰#ET#எதற்கும்துணிந்தவன்#Suriya40FirstLook#HappyBirthdaySuriya
சில தினங்களுக்கு முன் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளிவந்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து சூர்யாவின் 3 திரைப்படங்கள் பற்றிய அப்டேட்கள் வந்திருப்பதால், சமூக வலைதளங்களில் இப்போது சூர்யாதான் ட்ரெண்டிங் ஸ்டாராக இருக்கிறார்.