Published : 06,Aug 2017 11:49 AM

கார்கள் - லாரி அடுத்தடுத்து மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

car-accident-in-bangalore-highway

வேலூரை அடுத்த ரத்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதுவதை தவிர்ப்பதற்காக அவ்வழியில் வேகமாக சென்ற கார் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். பின்னால் அதிவேகமாக வந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி ஒன்றன் பின் ஒன்று மோதி ‌பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 3 கார்களில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவர். படுகாயம் அடைந்த மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் நிலோபர் கபிலும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். உயிரிழந்தவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்