
இந்தியாவில் ஒரேநாளில் 35,342 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 38,740 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,04,29,339 லிருந்து 3,04,68,079 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 483 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 4,18,987 லிருந்து 4,19,470 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4,05,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.