[X] Close

அதிமுக கூட்டத்தில் எதிரொலித்த 'கொங்கு நாடு' விவகாரம்

தமிழ்நாடு

konnadu-issue-echoed-in-the-AIADMK-meeting

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சியின் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கொங்கு நாடு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

கொங்குநாடு என்ற பெயரில் தனி மாநிலம் என அண்மையில் எழுந்த சர்ச்சை பெரும் விவாதப்பொருளானது. நேற்று நடைபெற்ற அதிமுக மாநில நிர்வாகிகள் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், கொங்கு நாடு விவகாரம் குறித்தும் 'அதிமுகவுக்கு மாற்றாக பாஜக என்பதான கருத்து' குறித்தும் பதிலளிக்கும் வகையில் அதிமுக தலைமை வெளிப்படையாக அறிக்கை விடுத்திருக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.

இதுபோன்ற சர்ச்சைகள் எழும்போது பாஜக தலைவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பேசி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.


Advertisement

ஏற்கனவே, பாஜகவுடன் கூட்டணி வைத்ததே அதிமுக தோல்விக்கு காரணம் என தொண்டர்கள் கருதுவதாகவும், பலரும் திமுகவில் இணைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close