[X] Close

கொலைகளால் பாஜகவினரை பீதியடைய செய்ய முடியாது: அருண் ஜேட்லி

RSS-cadre-Murder--Arun-Jaitley-condemn

கேரளாவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று திருவனந்தபுரம் வந்த அவர், ராஜேஷின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் ராஜேஷுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜேட்லி, இதுபோன்ற வன்முறைகளால் பாஜகவினரை பீதியடையச் செய்ய முடியாது என்று கூறினார்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தீர்க்கமாக போராடும் எண்ணம் பாஜகவினருக்கு ஏற்பட்டு வருவதாகவும் ஜேட்லி குறிப்பிட்டார். கொலை செய்யப்பட்ட ராஜேஷின் உடலில் 70 முதல் 80 காயங்கள் வரை இருந்ததாகவும், எதிரிகள் கூட இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட மாட்டார்கள் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.


Advertisement

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர்தான் இந்த கொலைக்கு காரணம் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் அதை மார்க்சிஸ்ட் கட்சி மறுத்து வருகிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close