
திட்டம் போட்டு நினைத்ததை சாதித்துவிட்டேன் என்று நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.
தமிழில் ஆடுகளம், காஞ்சனா 2, ஆரம்பம் உட்பட சில படங்களில் நடித்தவர் டாப்ஸி. இப்போது இந்திப் படங்களில் நடித்துவரும் இவருக்கு சொந்த ஊர் டெல்லி. அங்கு ஒரு வீடு இருக்கிறது. இவரது ஆசை, மும்பையில் சொந்தமாக வீடு, கார் வாங்குவதுதான். அது இப்போது நிறைவேறியிருக்கிறது. மும்பை அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மூன்று பெட் ரூம் கொண்ட வீட்டைச் சொந்தமாக வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில் தன் தங்கை ஷாகுனுடன் விரைவில் குடியேறுகிறார். கிரகப்பிரவேசத்துக்காக வீட்டில் டெக்கரேஷன் வேலைகள் நடந்துவருகிறது.
இதுபற்றி டாப்ஸி கூறும்போது, ‘2017-ல் எனது பர்த்டே வருவதற்கு முன் சொந்தமாக வீடு, கார் வாங்க வேண்டும் என நினைத்தேன். அதற்கான திட்டத்துடன் செயல்பட்டேன். சரியாக எனது பிறந்த நாளுக்கு (ஆகஸ்ட் 1) முன்பே வீட்டின் சாவி என் கைக்கு வந்துவிட்டது. காரும் சில மாதங்களுக்கு முன் கிடைத்துவிட்டது. நினைத்ததை சாதித்துவிட்டேன். எனது பர்த்டேவுக்கு நானே கொடுத்த கிப்ட் இது’ என்கிறார்
மகிழ்ச்சியாக!