[X] Close

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஷிகர் தவன் பதினாறாவது இடத்திற்கு முன்னேற்றம்

விளையாட்டு

Shikhar-Dhawan-got-Sixteenth-spot-in-International-ODI-Cricket-Ranking-for-Batsmen

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஷிகர் தவன் 16ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.


Advertisement

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஷிகர் தவன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச தரவரிசைப் பட்டியலில் கூடுதல் புள்ளிகளை பெற்றுள்ளார். 712 புள்ளிகளுடன் இரண்டு இடங்கள் முன்னேறி 16வது இடத்தை அவர் பிடித்துள்ளார். கேப்டன் விராட் கோலி 848 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்திலும், ரோஹித் ஷர்மா 817 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அஸாம் 873 புள்ளிகளை குவித்து முதலிடத்தில் உள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close