Published : 21,Jul 2021 09:24 PM

ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகைக்கு சுற்றறிக்கை: விளக்கம் கேட்கும் சு.வெங்கடேசன்

Corporation-orders-to-repair-of-roads-in-the-places-where-RSS-Chairman-visits-Madurai-City-in-Tamil-Nadu-State-and-MP-S-Venkatesan-seeks-explanation-via-tweet

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் மதுரை பயணத்தை முன்னிட்டு சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் வெளியிட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்ப, அதற்கு மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் உள்ள சாய்பாபா கோவில் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் 26ஆம் தேதி வரை பங்கேற்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் வழித்தடங்கள் வரை சாலைகளை சீரமைப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கேடசன் தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் எந்த விதிகளின்படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், இந்த சுற்றறிக்கை தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது எப்போதும் செய்யக் கூடிய பணிதான் எனவும், போக்குவரத்தில் எந்தத் தடையும் இன்றி பயணிப்பதற்காக காவல்துறை தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, இந்த ஆணையை உதவி ஆணையர் வழங்கியிருப்பதாகவும் விளக்கம் அளித்தார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்