Published : 20,Jul 2021 08:59 PM
புதுச்சேரியில் கல்லூரிகள் திறப்பு எப்போது? - தமிழிசை சௌந்தர்ராஜன் பதில்

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு கல்லூரிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான் நேரடி வகுப்புகள் நடத்த முடியும் என்பதால் அரசே அவர்களுக்கு முகாம் நடத்துவதாக கூறினார்.