[X] Close

கேரளா: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பிளஸ் 2 மாணவரின் 'பஜாக்கிள்' போராட்டம்

இந்தியா

A-Class-12-Students-novel-way-protest-against-Hike-in-Petrol-and-Diesel-Fuels-by-riding-a-mix-of-scooter-and-cycle-vehicle

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை கண்டித்து கேரளாவை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் நூதன முறையில் 'பஜாக்கிள்' போராட்டம் மேற்கொண்டுள்ளார். கேரளாவில் உள்ள கொச்சி நகர பகுதியில் வசித்து வரும் முகமது பாதுஷா தான் இந்த போராட்டத்தை மேற்கொண்ட மாணவர்.


Advertisement

பிஸியாக வாகனங்கள் பறக்கும் சாலையில் பழைய பஜாஜ் ஸ்கூட்டர் மற்றும் சைக்கிளை ஆல்டர் செய்துள்ளார் அவர். முன்பக்கமாக நின்று பார்க்கும் போது இரு சக்கர வாகனத்தில் வருவதை போலவே உள்ளது. ஆனால் அந்த வாகனம் கடந்து செல்லும் போது தான் அது பெடல் பவரால் இயங்கும் சைக்கிள் என தெரிகிறது. 

பஜாஜ் ஸ்கூட்டர் மற்றும் சைக்கிளை இணைத்து இதை உருவாக்கி உள்ளமைக்காக இந்த சைக்கிளுக்கு ‘பஜாக்கிள்’ என பெயரிட்டுள்ளதாக சொல்கிறார் மாணவர் முகமது பாதுஷா. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close