[X] Close

இந்திய சந்தையில் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஜியோமி

டெக்னாலஜி

Xiaomi-launches-affordable-5G-smartphone-in-Indian-market-and-the-mode-is-Redmi-Note-10T-5G-Smartphone

ஜியோமி நிறுவனம் இந்திய செல்போன் சந்தையில் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி நோட் 10 சீரிஸில் ஐந்தாவது மாடலாக அமைந்துள்ளது நோட் 10T 5ஜி ஸ்மார்ட்போன். வரும் 26-ஆம் தேதி இந்த போன் விற்பனைக்கு வருகிறது.  ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டிலும் கிடைக்கும்.  


Advertisement

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட இந்த போனின் விலை 13,999 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே மற்றொரு வேரியண்டான 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போனின் விலை 15,999 ரூபாயாகும். நான்கு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. 

image


Advertisement

இந்த போனின் ஸ்கிரீன் சைஸ் 6.5 இன்ச். ஃபுல் HD, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC, ஆண்ட்ராய்டு 11, ரியர் சைடில் மூன்று கேமரா, 8எம்பி செல்ஃபி கேமரா, 5ஜி மற்றும் 4ஜி LTE சப்போர்ட், டைப் சி சார்ஜிங் போர்ட், 3.55mm ஹெட்போன் ஜாக், 5,000mAh பேட்டரி மாதிரியானவை இந்த போனில் இடம் பெற்றுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close