[X] Close

சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் தனிநபர் கஷாபா தாதா சாகேப் ஜாதவின் கதை!

சிறப்புக் களம்,ஒலிம்பிக்

The-story-of-Kashaba-Dadasaheb-Jadhav-who-was-the-first-individual-to-win-an-Olympic-medal-in-independent-India

விளையாட்டு உலகின் திருவிழாவான ஒலிம்பிக் அடுத்த சில நாட்களில் கோலாகலமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் தனிநபர் கஷாபா தாதாசாகேப் ஜாதவின் வெற்றிக் கதையை அறிந்து கொள்வோம். 


Advertisement

சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அவர். மல்யுத்தத்தில் இந்தியாவுக்காக 1952-ல் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார். 

image


Advertisement

வீட்டில் கடைக்குட்டி சிங்கம் 

மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள கோலேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 1926, ஜனவரி 15-ல் பிறந்தவர். வீட்டில் கடைசி பிள்ளை அவர் தான். அவரது தந்தை தாதாசாகேப் ஜாதவும் மல்யுத்த விளையாட்டு வீரர். அதனால் அந்த விளையாட்டை தங்கள் உயிர்மூச்சாக கொண்டிருந்த வீரர்களை சார்ந்தே அவரது பால்ய காலம் நகர்ந்துள்ளது. 

ஐந்து வயதில் மல்யுத்த விளையாட்டு அவருக்கு அறிமுகமாகி உள்ளது. அவரது தந்தை தான் அவருக்கு முதல் குரு. தொடர்ந்து பாபுராவ் பாலாவ்டே மற்றும் பெலாபுரி குருஜி மாதிரியானவர்கள் அவருக்கு ஆசானாக இருந்துள்ளனர். 


Advertisement

22 வயதில் ஒலிம்பிக் அரங்கம்!

தேசிய அளவில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் கஷாபா. அதுவரை மண்ணில் மல்யுத்த விளையாட்டு விளையாடி அவர் முதல்முறையாக மேட்டில் விளையாடியதே ஒலிம்பிக் அரங்கில்தான். அவரது செலவுகளை கோலாப்பூர் மகாராஜா ஸ்பான்ஸர் செய்திருந்தார். பிளைவெயிட் பிரிவில் Rees Gardner கொடுத்த சிறப்பு பயிற்சியுடன் ஒலிம்பிக்கில் விளையாடினார். முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி, அடுத்த போட்டியில் தோல்வியை தழுவி ஆறாவது இடம் பிடித்தார். 

image

1952 ஒலிம்பிக்!

முதல் ஒலிம்பிக்கில் பெற்ற அனுபவத்தை மூலதனமாக வைத்து நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்தார் கஷாபா. இந்த முறை Bantamweight கேட்டகிரியில் பங்கேற்றார். மூன்று வெற்றி, இரண்டு தோல்வியை தழுவிய அவர் ரேங்கிங்கில் மூன்றாம் இடம் பிடித்தார். அதன் மூலம் அந்த முறை மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் அவர். அது சரித்திர சாதனையாக அமைந்தது. 

இறுதி நாட்கள்

1955-ல் காவல் துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். அதோடு பயிற்சியாளரகவும் பணியாற்றியுள்ளார். ஓய்வூதியம் கிடைக்க மிகவும் போராட்டம் மேற்கொண்டதாக கூட தகவல்கள் சொல்கின்றன. இறுதியில் சாலை விபத்தில் 1984-ல் உயிரிழந்தார். அவர் குறித்த பயோபிக் திரைப்படத்திற்கான ஸ்க்ரிப்ட் பணி பிரீ புரொடக்ஷன் நிலையில் உள்ளதாம். 

அவரது மறைவுக்கு பிறகு அர்ஜுனா விருது அவருக்கு கொடுத்து கவுரவிக்கப்பட்டது. 


Advertisement

Advertisement
[X] Close