[X] Close

டி20 தொடரை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து - பாகிஸ்தான் இன்று மோதல்

விளையாட்டு

England-faces-Pakistan-in-3rd-T20-series-today

டி20 தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி இங்கிலாந்தின் ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.


Advertisement

image

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதலில் விளையாடிய ஒருநாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் படுதோல்வியை சந்தித்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன.


Advertisement

முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்க, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடந்த 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது டி20 இன்று நடக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close