[X] Close

இன்றும் வரும் மழை!

It-may-rain-today

சென்னையில் நேற்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று மழை பெய்தது. சென்னையில் எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், பாரிமுனை, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென மழை பெய்தது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close